அரையிறுதியில் ஸ்பர்ஸ்-செல்சி

அரையிறுதியில் ஸ்பர்ஸ்-செல்சி

1 mins read
8a50e76a-d852-4e81-b085-29db68b2f591
-

லீக் கிண்ண அரையிறுதியில் ஆர்சனல் காற்பந்துக் குழுவை வெற்றிகொண்டதைக் கொண்டாடும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு ஆட்டக்காரர்கள். படம்: இபிஏ

லண்டன்: காற்பந்துக் களத்தில் தனது பரம எதிரியான ஆர்சனல் குழுவைப் பழிதீர்த்துக்கொண்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு. ஆர்சனலின் எமிரேட்ஸ் விளை யாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த லீக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 2=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த விளையாட்டரங்கில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பர்ஸ் வென்றிருக் கிறது. இதன்மூலம் இரண்டு வாரங் களுக்குமுன் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 4=2 எனும் கோல் கணக்கில் அடைந்த தோல்விக்கும் ஸ்பர்ஸ் வஞ்சம் தீர்த்துக்கொண்டது.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ஸ்பர்சின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் தென்கொரிய வீரரான ஹியூங் மின் சன். 59வது நிமிடத்தில் டெலி அலி அடித்த அற்புதமான கோல் அக்குழுவின் வெற்றியை உறுதிசெய்தது. தங்களுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளை எல்லாம் ஆர்சனல் வீரர்கள் வீணாக்கினர். இருமுறை அவர்கள் உதைத்த பந்து ஸ்பர்சின் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதாலும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் மெசுட் ஓசில் களம் இறக்கப்படவில்லை. ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரியின் இந்த முடிவு பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.