ஜல்லிக்கட்டு; உச்ச நீதிமன்றத்தில் பீட்டா புதிய முறையீடு

ஜல்லிக்கட்டு; உச்ச நீதிமன்றத்தில் பீட்டா புதிய முறையீடு

1 mins read

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முறையிட முடிவு செய்துள்ளது. பீட்டா தொடர்ந்த வழக்கால் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. பின்னர் 2017ல் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் உலகமே தமிழகத்தைத் திரும்பி பார்த்தது. இதையடுத்துச் சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் பீட்டா அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கும் என்பதால் ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் இருக்கும் வழக்கை பொங்கல் பண்டிகைக்கு முன் விரைவாக விசாரித்து நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும் எனப் பீட்டா கோரிக்கை விடுக்கவுள்ளது.