லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் குழு ஆட்டக்காரர்கள் காற் பந்தை மீண்டும் அனுபவித்து விளையாடச் செய்வதே தமது முதல் பணி என்று அக்குழுவின் இடைக்கால நிர்வாகியாக நியமிக் கப்பட்டுள்ள ஒலே குனார் சோல்சியார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டு களாக யுனைடெட்டின் நிர்வாகி யாகச் செயல்பட்டு வந்த ஜோசே மொரின்யோ இவ்வார மத்தியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அவ ருக்குப் பதிலாக புதிய நிரந்தர நிர்வாகியைத் தேடத் தொடங்கி இருக்கும் யுனைடெட் நிர்வாகம், இடைக்கால நிர்வாகியாக தனது முன்னாள் வீரரான 45 வயது சோல்சியாரை நியமித்துள்ளது.
இப்பருவத்தில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் யுனைடெட் குழு வினரின் திறமைகள் களத்தில் வெளிப்படுவதைக் காண விரும்பு வதாகக் கூறியுள்ளார் நார்வே நாட்டவரான சோல்சியார். "யுனைடெட் வீரர்கள் காற் பந்தை அனுபவித்து ஆடச் செய் வோம். அதேபோல, ரசிகர்களும் மீண்டும் பெருவாரியாக அரங்கிற் குத் திரும்புவதைக் காணவும் விரும்புகிறோம்," என்றார் அவர்.

