ஆர்சனல், ஸ்பர்ஸ் குழுக்களுக்கு அபராதம்

ஆர்சனல், ஸ்பர்ஸ் குழுக்களுக்கு அபராதம்

1 mins read
f8092c1c-05a6-4ffc-941e-3f3fe9b28b2f
-

லண்டன்: வீரர்களைக் கட்டுப் படுத்தத் தவறியதற்காக ஆர்சனல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற் பந்துக் குழுக்களுக்கு இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் மொத்தம் 95,000 பவுண்டு (S$165,000) அபராதம் விதித்துள்ளது. இம்மாதம் 2ஆம் தேதி ஆர்சன லின் எமிரேட்ஸ் விளையாட்டரங் கில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அக்குழு 4=2 என்ற கோல் கணக்கில் ஸ்பர்சைத் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் சார்பில் கோலடித்த எரிக் டயர் அதைக் கொண்டாடியவிதத்தைக் கண்டு எல்லைக்கோட்டுக்கு அப் பால் அமர்ந்திருந்த ஆர்சனலின் மாற்று ஆட்டக்காரர்கள் கோபம் அடைந்தனர். இதனால் இரு குழு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. சம்பவத்தை விசாரித்த காற் பந்துச் சங்கம் ஆர்சனலுக்கு 45,000 பவுண்டும் ஸ்பர்சுக்கு 50,000 பவுண்டும் அபராதமாக விதித்தது.