டாக்கா: பந்தடிப்பிலும் பந்துவீச்சி லும் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் அசத்த, இரண்டாவது டி20 போட்டியில் பங்ளாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீசை 36 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இரண்டு ஆட்டங்கள் முடிவில் 1=1 எனச் சமனுக்கு வந்துள்ளது. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணியில் லிட்டன் தாஸ் (60), சௌம்ய சர்க்கார் (32), ஷாகிப் அல் ஹசன் (42*), மஹ்முதுல்லா (43*) ஆகியோர் அதிரடியாக ஆடி ஓட்டங்களைச் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் (36), ரோவ்மன் பொவெல் (50) தவிர மற்றவர்கள் சிறப்பாக ஆடத் தவறினர். இறுதியில் அந்த அணி நான்கு பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 175 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றுப் போனது.
பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசனின் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் ஃபேபியன் ஆலன் (வலது). படம்: ஏஎஃப்பி

