மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் இன்னும் அதற்கான பயிற்சியைத் தொடங்க வில்லை. அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பெர்த் தில் நடந்த அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வென்றதால் தொடர் 1-1 எனச் சமநிலையில் உள்ளது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சி இருப்பதால் தொடரை வெல்ல இரு அணிகளும் பெரும் முனைப்புக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 18ஆம் தேதியே இரண்டாவது போட்டி முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது போட்டிக் காக இந்திய வீரர்கள் இன்னும் வலைப் பயிற்சியைத் தொடங்க வில்லை எனத் தகவல்கள் கூறு கின்றன. பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி இன்று வரை வீரர்களுக்கு ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் நாளை முதல் வலைப்பயிற்சியில் அவர்கள் ஈடுபடுவர் என்றும் 'மும்பை மிரர்' செய்தி வெளியிட் டுள்ளது.
ஓய்வில் இந்திய அணி
1 mins read

