புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் தமி ழகத்தைச் சேர்ந்தவரு மான டபிள்யூ.வி. ராமன் (படம்) இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்று விப்பாளாராக நியமிக் கப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் அணி உலகக் கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் அப்போதைய பயிற்று விப்பாளரான தென்னாப்பிரிக்கா வின் கேரி கிர்ஸ்டன். அவரே மகளிர் அணியின் பயிற்றுவிப்பாள ராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு திரு ராமன் வசமானது.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கிர்ஸ்டன் பயிற்சி அளிக்க இருப்பதால் அவரால் ஒரே நேரத் தில் இரு பதவிகளை வகிக்க முடியாது. இடது கை தொடக்க ஆட்டக்காரரான 53 வயது திரு ராமன், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 27 ஒருநாள் போட்டிகளிலும் விளை யாடியுள்ளார். 1992ல் தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

