ஹஸ்சி: ஹார்திக் பாண்டியா களமிறங்க வேண்டும்

1 mins read

மெல்பர்ன்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே அடிலெய்ட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற இரண் டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது.

இதன் விளைவாக போட்டித் தொடர் 1=1 எனும் கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலை யில், இந்தியா= ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26ஆம் தேதி மெல்பர்னில் தொடங்குகிறது. இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னாள் பந்தடிப்பாளர் மைக் ஹஸ்சி செய்தியாளர் களிடம் பேசினார்.

"பெர்த் ஆடுகளத்தின் தன்மை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அதில் இருந்து மெல்பர்ன் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறுபட்ட தாகும். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப் பாகப் பந்து வீசி வருகிறார்கள்.

வெப்பத்தையும் பொருட்படுத் தாமல் அடிலெய்ட், பெர்த் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ஓவர்கள் வீசினார்கள். ஹார்திக் பாண்டி யா கிட்டத்தட்ட மிட்செல் மார்ஷ் போன்றவர். அவர் அருமையாகச் செயல்பட்டு வருகிறார். எனவே அவரை மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் ஆடும் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்," என்றார் மைக் ஹஸ்சி.