லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் மீது அக்குழுவின் முன்னாள் அணித் தலைவர் ரோய் கீன் ஆத்திரமாக இருக்கிறார். இப்பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாத காரணத்தால் ஜோசே மொரின்யோவை நிர்வாகி பதவியிலிருந்து அக்குழு நீக்கியது. யுனைடெட் சோபிக்காததற்கு ஆட்டக் காரர்களும் காரணம் என்றும் மொரின்யோ பலி ஆடாகிவிட்டார் என்றும் கீன் தெரிவித்தார். மொரின்யோவுக்கும் வீரர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்பட்டது. வீரர்கள் ஒழுங்காக விளையாடாமல் இருந்தால் நிர்வாகி கடிந்துகொள்வது இயல்புதான் என்றார் கீன்.
மேன்யூ வீரர்கள் மீது ரோய் கீன் காட்டம்
1 mins read

