லிவர்பூலின் கர்ஜனையில் கவிழ்ந்த உல்வ்ஸ் குழு

உல்வர்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டியலில் முன்னிலை வகிக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடன் லிவர்பூல் குழுவின் ஆட்டக்காரர்கள் கிறிஸ்மஸ் விடு முறையைக் கொண்டாடுவர். நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் உல்வ்ஸ் குழுவை அது 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் லிவர்பூலின் நிலை வலுவடைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இரண்டாவது நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியைவிட அது நான்கு புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை மான்செஸ்டர் சிட்டி தோற்கடித்திருந்தால் இந்த இடைவெளி குறைந்திருக்கும். நேற்று அதிகாலை உல்வ்ஸ் குழுவின் விளையாட்டரங்கத்தில் கொட்டும் மழையைக்கூட பொருட்படுத்தாமல் லிவர்பூல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் உல்வ்ஸ் தாக்குலில் தீவிரம் காட்டியது. அக்குழுவின் மொரோக்கோ நாட்டு ஆட்டக்காரர் ரோமேன் சாயிஸ் அனுப்பிய பந்தை லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் பெக்கர் தடுத்து நிறுத்தினார். சொந்த ரசிகர்கள் முன் முனைப்புடன் தாக்குதல்களில் ஈடுபட்ட உல்வ்ஸ் குழுவைக் கண்டு லிவர்பூல் பதற்றம் அடையவில்லை. லிவர்பூலின் நிதானத்துக்கு ஆட்டத் தின் 18வது நிமிடத்தில் பலன் கிட்டியது. முகம்மது சாலா கோல் போட்டு லிவர்பூலை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

பந்தை வலை நோக்கி அனுப்பும் லிவர்பூலின் முகம்மது சாலா. அவரைத் தடுக்க பாயும் உல்வ்ஸ் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர், கோல்காப்பாளர். ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!