கார்டிவ்: மான்செஸ்டர் யுனை டெட்டில் தற்காலிக அடிப்படையில் புதிய நிர்வாகியாக பொறுப்பேற் றுள்ள ஒலே குணா சோல்சியாரை வரவேற்கும் விதமாக அந்தக் குழு கார்டிவ் சிட்டி குழுவை 5=1 என்ற கோல் எண்ணிக்கையில் நேற்று அதிகாலை ஒதுக்கித் தள்ளியது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத் தில் இருந்தே தாக்குதலை மேற் கொண்ட யுனைடெட் வீரர்கள் இதுநாள்வரை தங்களுடைய திறனை எங்கு ஒளித்து வைத் திருந்தனர் என்று பார்ப்போர் ஆச் சரியப்படும் விதத்தில் நேற்று விளையாடினர். இதுவரை கடந்த சில ஆட்டங் களாக தொடக்க அணியில் இடம்பெறாத பால் போக்பா நேற்றைய ஆட்டத்தின் நாயகனாக விளங்கினார். ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நி-மிடத்திலேயே தப் பாட்டம் காரணமாக கீழே தள்ளப் பட்டார் போக்பா. அதில் கிடைத்த ஃப்ரீகிக் வாய்ப்பைப் பயன்படுத்திய ரேஷ்ஃபர்ட் கோல் வலையை குறிபார்த்து பந்தை உதைத்து முதல் கோலை போட்டார்.
பின்னர், ஆட்டத்தின் 29ஆம் நிமிடம், 41 நிமிடம் என அடுத்தடுத்து வந்த இரு கோல்களும் போக்பா கொடுத்த பந்தால் வந்தன. இடையில், ஆட்டத்தின் 38ஆம் நிமிடத்தில் ரேஷ்ஃபர்ட் பந்தைக் கையாட கிடைத்த பெனால்டி வாய்ப்பினால் கார்டிவ் சிட்டி ஒரு ஆறுதல் கோலைப் பெற்றது. ஆனால், அந்த மகிழ்ச்சி அடங்கும் முன்னரே மூன்றாவது கோலை போட்ட யுனைடெட் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு தனது கோல் வேட்டையை முடித்துக்கொண்டது. மற்றோர் ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழு எவரும் சற்றும் எதிர்பாரதவிதமாக மான்செஸ்டர் சிட்டி குழுவை 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது. இதில் ஆன்ட்ரோஸ் டவுன்செண்ட் என்பவர் போட்ட கோல் அபாரம் என்று பார்த்தோர் வியந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் யுனைடெட்டின் கடைசி கோலை அந்த அணியின் ஜெஸ்ஸி லிங்கார்ட் கார்டிவ் சிட்டி கோல்காப்பாளரும் இங்கிலாந்தில் பிறந்த பிலிப்பீன்ஸ் நாட்டு வம்சாவளியினரான நீல் எத்தரிட்ஜ் என்பவரைத் தாண்டி கோல் போடுகிறார். இந்த ஆட்டத்தில் புத்துயிர் பெற்று விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-1 என்ற கோல் எண்ணிக்கையில் கார்டிவ் சிட்டியை துவம்சம் செய்தது. படம்: ஏஎஃப்பி

