புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் சிறப்பான திருப்தியைப் பெற முடியும். அதுவே கடினமான போட்டியும்கூட. பல சவால்களை எப்படி எதிர்கொள்வது எனக் கற்றுக்கொள்ளலாம். ஐந்து நாள் போட்டியில் உங்களது உடல் தகுதி, மனஉறுதி, டெக்னிக்கல் ஆட்டம் ஆகியவற் றைப் பரிசோதித்துக் கொள்ளலாம். எனவேதான் அது சவாலானது. உங்களுக்குச் சவால் வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு விராத் கோஹ்லியை உதாரணமாகக் கொள்ளுங்கள்," என இளையர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட்: இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்ட வேண்டும்
1 mins read

