லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், எவர்ட்டன் குழுக் களுக்கு இடையே நேற்று அதி காலை நடைபெற்ற ஆட்டத்தில் எவர்ட்டனை ஸ்பர்ஸ் 6=2 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூலைவிட ஆறு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ள நிலையில், பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஸ்பர்ஸ் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நிர் வாகி பொறுப்பிலிருந்து ஜோசே மொரின்யோ கடந்த வாரம் நீக்கப் பட்டதையடுத்து தற்போதைய ஸ்பர்ஸ் நிர்வாகி மௌரிசியோ பொக்கெட்டினோ இப்பருவத்தின் இறுதியில் யுனைடெட்டில் பொறுப்பு ஏற்றுக்கொள்வார் என்று ஊகம் கிளம்பியுள்ளது.
எனினும், எவர்ட்டன் உடனான ஆட்டத்தில் தங்களது கவனத் தைச் சிறிதும் சிதறவிடாமல் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்கள் அபார மான ஆட்டத்திறனை வெளிப்ப டுத்தி வெற்றியை உறுதி செய்த னர். எவர்ட்டனின் சொந்த மண் ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தி ன் முதல் கோல் எவர்ட்டனுக்கு சொந்தமானாலும் பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து கோல்களை அடிப்பதில் முனைப்பு காட்டியது ஸ்பர்ஸ். ஒவ்வொரு முறையும் தான் தாக்குதலில் ஈடுபடும் போ தெல் லாம் ஸ்பர்ஸ் அபாயகரமாக தென்ப ட்டது. ஸ்பர்சின் தென்கொரிய ஆட்டக் காரர் சோன் ஹுவெங் மின், குழுத் தலைவர் ஹேரி கேன் ஆகியோர் அடித்த இரு கோல் களும் டெலி அலி மற்றும் கிறிஸ்டி யன் எரிக்சன் ஆளுக்கு அடித்த ஒரு கோலும் ஸ்பர்சின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டன.
ஸ்பர்ஸ் குழுவுக்கான ஆறாவது கோலை சறுக்கி அடிக்கும் ஹேரி கேன் (வலக்கோடி). படம்: ஏஎஃப்பி

