மான்செஸ்டர்: ஒரு மனிதனாக தன்னை மேம் படுத்திய மான்செஸ்டர் யுனைடெட் குழு வின் முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின் யோவுக்கு தான் நன்றிக்கடன்பட்டிருப்பதாக அக்குழுவின் மத்தியத் திடல் ஆட்டக்காரர் பால் போக்பா கூறியுள்ளார். யுனைடெட் நிர்வாகி பதவியை மொரின்யோ வகித்தபோது போக்பாவுக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மொரின் யோவின் தலைமைத்துவத்தின்கீழ் யுனைடெட் ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.
நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தின் தொடக்கத்தில் யுனைடெட் குழுவின் துணைத் தலைவர் பொறுப்பு போக்பாவிடமிருந்து பறிக்கப் பட்டது. மொரின்யோவின்கீழ் யுனைடெட் ஆடிய கடைசி மூன்று லீக் ஆட்டங்களில் போக்பா இடம்பெறவில்லை. இருப்பினும், மொரின்யோமீது தான் விரக்தி அடையவில்லை என்றார் போக்பா. "மொரின்யோ நிர்வாகத்தின்கீழ் நாங்கள் கிண்ணங்களை வென்றிருக்கிறோம். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பு கிறேன்," என்றார் அவர்.

