இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: இந்தியா 215/2

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: இந்தியா 215/2

2 mins read
58525fd3-7686-464e-9fdc-86ba0e497866
-

அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் பெர்த் தில் நடந்த 2வது டெஸ்டில் ஆஸ் திரேலியா 146 ஓட்டங்கள் வித்தி யாசத் திலும் வெற்றி பெற்றன. இரு அணிகள் மோதும் மூன் றாவது டெஸ்ட் போட்டி சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 7.30 மணிக்கு மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கியது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடும் இப்போட்டி 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று அழைக் கப்படுகிறது.

இப்போட்டி யில் இந்திய தொடக்க ஜோடியான முரளி விஜய்=லோகேஷ் ராகுல் நீக்கப்பட் டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்ட னர். ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பீட் டர் ஹேண்ட்ஸ் கோம்புக்குப் பதி லாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட் டார். பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்தடிப்பைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் = ஹனுமா விகாரி களம் இறங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை கவனமுடன் எதிர்கொண் டனர். ஆடுகளத்தில் பந்து நன்கு எழும்பியது.

திடீரென்று பந்து பந்தடிப்பாளர் கால் முட்டிக் குக் கீழேயும் சென்றது. இதனால் விகாரி மிகவும் பொறுமையுடன் விளையாடினார். மயங்க் அகர்வால் ஓரளவுக்கு ஓட் டங்களைச் சேர்த்தார். பேட் கம் மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தை விகாரி தவிர்க்க முயன்ற போது கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. விகாரி 66 பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது எண்ணிக்கை 40 ஓட்டங்களாக இருந் தது. அடுத்து புஜாரா களம் வந் தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. மயங்க் அகர் வால் 34 ஓட்டங்களுடனும் புஜாரா 10 ஒட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியின் பந்தடிப்பாளர் மயங்க் அகர்வால் (வலது), ஆஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன். படம்: ஏஎஃப்பி