விராத் கோஹ்லி: பெய்னுக்கும் எனக்கும் இடையே எவ்விதப் பிரச்சினையும் இல்லை

2 mins read
6f87475e-da61-42a9-a2ff-38704d03b75c
-

அடிலெய்ட்: பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, ஆஸ்திரேலியா அணித் தலைவர் டிம் பெய்ன் உடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கடு மையாக விமர்சித்தனர். மூன்றாவது டெஸ்ட் குறித்து விராத் கோஹ்லி செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப் போது அவர் மீதான விமர்சனம் குறித்துக் கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளிக்கையில் "என்னை மக்கள் விரும்பவேண்டும் என்பதற்காக நான் என்ன செய்கிறேன், நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி கூறுவதற்கு நான் எப்போதும் வெளியே சென்றாலும் கையில் பேனர் வைத்துக்கொண்டு செல்ல முடியாது. "இதைத்தான் நான் வெளியே செல்லும்போது செய்கி றேன். என்னுடைய நோக்கம் போட்டி யில் வெல்வது, அணிக்கா கச் சிறப்பாக விளையாடுவது என் பதுதான். "என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள், கருத்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரி யாது. "என் மீது அக்கறையுடன்கூட அந்தக் கருத்து வைக்கப்பட்டு இருக் கலாம். ஒவ்வொருவரும் அவர்கள் பார்வையில் இருந்து கருத்துக் கூறுவார்கள். "நான் அதற்கு மதிப்பு அளிக்கிறேன். என் னு டைய நோக்கம் அனைத் துமே நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும், வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பது மட்டுமே.

"என்னை இந்தத் தொடரில் ஆஸ் திரேலிய ஊடகங்கள் வில்ல னாகச் சித்திரித்தாலும் எனக்குக் கவலையில்லை. "என்னுடைய பயிற் சியாளர் என் னு டன் அதிக நேரம் செலவிடுவ தால், என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். என்னைப் பற்றித் தெரிந் தவர்களிடம் என்னைப் பற்றி கேளுங் கள். ஆதலால், ஆஸ்திரே லிய ஊடகங்கள் எழுப் பிய விமர் சனத்திற்கு நானாகவே பதில் அளிக்கத் தேவையில்லை. "எனக்கும் பெய்னுக்கும் களத் தில் வாக்குவாதம் நடந்தது. அது நடந்து முடிந்த கதை. அனைத் துலக அளவிலான போட்டியில் இரு அணிகளும் விளையாடி வரு கின்றன. அப்போது, இது போன்ற சம்பவங்கள் களத்தில் நடக்கலாம். ஆனால், அதைக் கடந்துவிட்டு அடுத்த போட்டிக்குச் சென்றுவிட வேண்டும். "நாங்கள் இருவரும் வரம்பு மீறி பேசவில்லை, இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சினை யும் இல்லை. என்ன நடந்தது என்று எனக்கும் பெய்னுக்கும் தெரி யும். எதையும் அவசியமில்லா மல் இருவரும் செய்யவில்லை. மக்கள் பார்க்கும் வகையில் நல்ல வகையான கிரிக்கெட் போட்டியை விளையாட இருவரும் விரும்புகி றோம்," என்றார்.