நியூகாசல் உடனான ஆட்டத்தின் முடிவில் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பும் (நடுவில்) அக்குழுவின் ஆட்டக்காரர்களும் தங்களது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படும் நேற்று நடந்த சில முக்கிய ஆட்டங்களில் பெரும்பாலான முன்னணி குழுக் கள் வாகை சூடின. இவற்றில் குறிப்பிடும்படியாக, லீக் பட்டியலில் தனது முதல் நிலை ஆதிக்கத்தை லிவர்பூல் நிலைநாட்டியது. தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை அக்குழு 4-0 எனும் கோல் கணக்கில் மாபெரும் வெற்றி கண்டது.
நடப்பு இபிஎல் பருவத்தில் இதுவரை தான் விளை யாடிய 19 ஆட்டங்களில், 12 ஆட்டங்களில் தனக்கு எதிராக கோல் எதையும் லிவர்பூல் விழ விடவில்லை. அடுத்து வரும் முக்கிய இரு ஆட்டங்களில் ஆர்சனல், மான் செஸ்டர் சிட்டி குழுக்களுடன் பொருதவுள்ள லிவர்பூலுக்கு இந்த வெற்றி உந்துதலாக அமைந்து உள்ளது. லிவர்பூல் ஆட்டக்கா ரர்கள் முகம்மது சாலா, லோவ்ரன், ஃபெபின்யோ, ஷக்கிரி ஆகியோர் அடித்த கோல்கள் அக்குழுவின் வெற்றிக்கு வித்திட்டன. நேற்று நடைபெற்ற மற்றொரு முக்கிய ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி குழுவிடம் மான்செஸ்டர் சிட்டி 2-1 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இது ஐந்து நாட்களில் அந்தக் குழுவிற்கு கிட்டிய இரண்டாவது தோல்வியாகும். மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர ஆட்டக்கா ரர்கள் செர்ஜியோ அகுவேரோ, கெவின் டி பிரய்ன உள்ளிட்டோர் விளையாடியும் இந்த ஆட்டத்தின் முடிவை மாற்றியமைக்க முடியவி ல்லை. மான்செஸ்டர் சிட்டிக்கு காத்து இருந்த இன்னொரு சோதனையாக, தவறிழைத்ததன் காரணமாக ஆட்டக்காரர் டெல்ஃபுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அக்குழுவிற்கு பின்ன டைவு ஏற்பட்டது.

