சதம் அடிக்கத் தவறிய விராத் கோஹ்லி

சதம் அடிக்கத் தவறிய விராத் கோஹ்லி

2 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. மெல்பர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் மயங்க் அகர்வால் அறிமுகம் கண்டார். பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இரு விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ஓட்டங்கள் எடுத்தார்.

புஜாரா 68 ஓட்டங்களும் அணித் தலைவர் விராத் கோஹ்லி 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புஜா ராவும் கோஹ்லியும் தொடர்ந்து விளையாடினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நம்பிக்கை யுடன் எதிர்கொ ண்டு சிறப்பாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோஹ்லி அரை சதத் தைத் தொட்டார். மொத்தம் 110 பந்துகளில் ஆறு பவுண்டரியுடன் 50 ஓட்டங் களை அவர் குவித்தார். மறுமுனையில், புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவ ருக்கு இது இரண்டாவது சதம் ஆகும். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா இரு விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. புஜாரா 103 ஓட்டங்களுடனும் கோஹ்லி 69 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.