லிவர்பூல்: இப்போதெல்லாம் இங் கிலிஷ் லீக்கில் லிவர்பூல் காட்டில் மழை அடித்துக் கொட்டுகிறது. மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்யோ அக்குழுவிலிருந்து விலகி இன்று வரை அபூர்வமாக மான்செஸ்டர் சிட்டி குழு அடுத்தடுத்து தோல்வி களைத் தழுவியது. லிவர்பூல் குழுவும் நிர்வாகி கிளோப்பின் கீழ் சீரான ஆட் டத்தை வெளிப்படுத்தி வரவே இப் போது லிவர்பூல் குழு பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. சொல்லப்போனால் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரையிலும் முதல் இடத்தில் இருந்த மான்செஸ்டர் சிட்டி குழு தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியைத் தழுவ, அது லீக் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. லிவர்பூல் குழுவே தொடர்ந்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து லீக் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் லிவர்பூலின் அடுத்த இரு ஆட்டங்கள் அக்குழுவின் திறமைக்குச் சவால்மிக்கதாக அமையும். இன்று பின்னிரவு 1.30 மணிக்கு லிவர்பூல் ஆர்சனல் குழுவை எதிர்கொள்கிறது.
இங் கிலிஷ் லீக்: சவால்மிக்க காலக்கட்டம்
1 mins read
-

