இத்தாலி லீக்கில் இன ரீதியான சாடல்; ரசிகர் மரணம்

மிலான்: இத்தாலியக் காற்பந்து லீக் ஆட்டம் ஒன்றில் இன்டர் மிலான் குழுவும் நப்போலி குழுவும் கடந்த புதன்கிழமை மோதின. அதில் நப்போலி குழுவின் செனகல் நாட்டு ஆட்டக்காரர் கலிடோ கொலிபாலி இண்டர் மிலான் ரசிகர்களால் இன ரீதியான சாடலுக்கு ஆளானார். ஆட்டம் முழுவதும் மிலான் ரசிகர்கள் கலிடோவை நோக்கி குரங்கு செய்யும் சத்தங்களை எழுப்பினர். அந்த ஆட்டத்தை நேரில் கண்ட மிலான் நகர மேயர் அச்சம்பவத்துக்காக மிலான் மக்கள் சார்பாக மன்னிப்பு கோரி னார். இதற்கிடையே, இத்தாலி லீக்கின் யுவென்டஸ் குழுவின் விளையாடும் கிறிஸ்டி யானோ ரொனால்டோ உட்பட பல காற்பந்து ஆட்டக்காரர்கள் கலிடோவுக்கு ஆதரவு தெரிவி த்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்டர் மிலான் அடுத்த இரு ஆட்டங் களை ரசிகர்கள் இல்லாத அரங்கில் விளையாட வேண்டும் என்று அந்நாட்டுக் காற்பந்துச் சம்மேளனத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சைக்குரிய ஆட் டத்திற்கு முன் மிலான் ரசிகர் களுக்கும் நப்போலி ரசிகர்க ளுக்கு இடையே மிலான் அரங் கில் நடந்த கைகலப்பில் ஓர் இன்டர் மிலான் ரசிகர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களால் மருத்துவ மனையில் மரணம் அடைந்தார். இதைத் தொடந்து காற்பந்து கலவரத்தையும் இன தூற்று தலையும் நிறுத்த தாம் இத்தாலி காற்பந்து லீக்கையே ரத்து செய்யக்கூடும் என இத்தாலிய லீக்கின் தலைவர் கேப்ரியல் கவினா எச்சரித்துள்ளா ர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!