கொச்சி: ஆறாவது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. 'ஏ' பிரிவில் குஜராத் ஃபார்ச்சுன் (93 புள்ளிகள்), மும்பை (86 புள்ளிகள்), தபங் டெல்லி (68 புள்ளிகள்) ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் (43 புள்ளிகள்), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளிகள்) ஆகியவை நான் காவது முதல் ஆறாவது இடங் களைப் பிடித்து வெளியேறின. 'பி' பிரிவில் பெங்களூரு புல்ஸ் 78 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் உ.பி. யோதா 57 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
நடப்பு வெற்றியாளர் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளிகள்), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளிகள்), தமிழ் தலைவாஸ் (42 புள்ளிகள்) ஆகிய அணிகள் வெளியேறின. 'எலிமினேட்டர் 1' ஆட்டத் தில் 'ஏ' பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மும்பையும் 'பி' பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த உ.பி. யோதா அணியும் மோதுகின்றன. 'எலிமினேட்டர் 2' ஆட்டத் தில் 'ஏ' பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த டெல்லியும் 'பி' பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெங்கால் வாரியர்சும் மோதுகின்றன. 'குவாலிஃபையர் 1' ஆட்டத் தில் 'ஏ' பிரிவில் முதல் இடத் தைப் பிடித்த குஜராத், 'பி' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூருவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

