வெற்றியை நெருங்கியது இந்தியா

வெற்றியை நெருங்கியது இந்தியா

2 mins read
d2ca947d-e641-4ff8-94bb-b09c24b18d1b
-

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையி லான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பந்தடித்த இந்தியா 7 விக்கெட்டுகளுக்கு 443 ஓட்டங் கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. இதை அடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மிக விரைவில் விக்கெட்டு களைப் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்தடிப்பாளர்கள் அனைவரும் 25 ஓட்டங்களை எட்டவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ஓட்டங்களில் சுருண்டு 'ஃபாலோ ஆன்' ஆனது. பும்ரா 33 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டு களைக் கைப்பற்றினார். 292 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் 'ஃபாலோ ஆன்' வழங்கவில்லை. இறுதி நாள் ஆட்டத்தில் ஒரு வேளை பந்தடிக்கும் நிலை ஏற்பட்டு ஆஸ்திரேலியா நிர்ண யிக்கும் இலக்கை விரட்ட நேரிட்டால் சிரமமாகிவிடும் என்று கருதிய இந்திய அணி, 292 ஓட்டங்கள் முன்னிலையுடன் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாட முடிவு செய்தது.

ஆனால் இரண்டாவது இன் னிங்ஸ் இந்தியாவுக்குத் திருப்தி கரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நன்கு விளையாடினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலைத் தவிர, முன் வரிசை வீரர்கள் அனைவரும் சோபிக்கவில்லை. இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்கள் எடுத் திருந்தது.

ஆஸ்திரேலியாவின் டிம் பெயின் ஆட்டமிழந்ததை அடுத்து சகவீரர்களுடன் கொண்டாடும் விராத் கோஹ்லி (நடுவில்). படம்: இபிஏ