ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றிக்கொடி

மெல்பர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தரவரி சையில் முதல் இடத்தில் இருந்து வந்தாலும் ஆஸ்திரேலியாவில் ஒருமுறைகூட இந்திய அணி தொடரை வென்றதில்லை. இந்த நிலையில், அந்த நெடு நாள் ஏக்கத்தைத் தீர்க்க இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2=1 என வெற்றிகொள்ள முடியாத முன்னிலையைப் பெற்றுள் ளது. அடுத்த மாதம் 3ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் கடைசி, நான்காவது போட்டியைக் குறைந்த பட்சம் 'டிரா' செய்தாலே போதும், தொடர் இந்திய அணியின் வச மாகிவிடும்.

மெல்பர்னில் நேற்று முடிந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது. வெகு நிதானமாகப் பந்தடிக்கத் தொடங்கிய இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங் களை எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதன் பின் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி, ஜஸ்பிரீத் பும்ராவின் அபார பந்துவீச்சில் நிலைகுலைய, 151 ஓட்டங்களில் சுருண்டது. இருநூறு ஓட்டங்களுக்குமேல் முன்னிலை பெற்றும் 'ஃபாலோ ஆன்' தராமல் இந்திய அணியே மீண்டும் பந்தடித்தது. ஆனாலும் இம்முடிவு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இந்திய அணி மளமள வென விக்கெட்டுகளைப் பறிகொ டுத்தது. எட்டு விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத் திருந்தபோது 2வது இன்னிங்சை 'டிக்ளேர்' செய்தார் கோஹ்லி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!