லிவர்பூல்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் எதிரணி களால் வெல்ல முடியாத குழுவாக லிவர்பூல் வீரநடை போட்டு வருகிறது. இதன்மூலம் 29 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் பட்டம் அக்குழுவின் கை சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சொந்த ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் அக்குழு 5=1 என்ற கோல் கணக் கில் ஆர்சனலைப் புரட்டி எடுத்தது. அத்துடன், அடுத்தடுத்த ஆட்டங் களில் மான்செஸ்டர் சிட்டி குழு தோற்ற தும் உல்வ்ஸ் குழுவிடம் 3=1 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு அதிர்ச்சித் தோல்வி கண்டதும் பட்டியலில் லிவர்பூலின் முதலிடத்தை வலுவாக்கி உள்ளது.
இதுவரை 20 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாமிடத்தில் உள்ள ஸ்பர்ஸ் குழுவைவிட ஒன்பது புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 54 புள்ளிகளுடன் அக்குழு முதலிடத்தில் நீடிக்கிறது (நேற்றிரவு நடக்கவிருந்த மேன்சிட்டி = சௌத்ஹேம்டன் ஆட்டத் திற்கு முந்தைய நிலவரம்). ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் 11வது நிமிடத்திலேயே முன்னிலையை விட்டுக்கொடுத்தது லிவர்பூல்.

