தொடரை வென்றது நியூசிலாந்து

தொடரை வென்றது நியூசிலாந்து

2 mins read

கிறைஸ்ட்சர்ச்: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 423 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி 1=0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அபார மாக ஆடி சதமடிக்க, வெலிங்டனில் நடந்த முதல் ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி கிறைஸ்ட் சர்ச்சில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் டாம் லேதம் (176), ஹென்ரி நிக்கல்ஸ் (162*) என இருவர் சதமடிக்க, நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 585 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 660 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குண திலக நான்கு ஓட்டங்களிலும் கருண ரத்னே ஓட்டமேதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

சந்திமால் (56), மெண்டிஸ் (67) சற்று நேரம் தாக்குப் பிடித்தனர். 22 ஓட்டங்களை எடுத்த நிலையில் அனுபவ ஆட்டக்காரர் மேத்யூஸ் காய மடைந்து வெளியேறியதும் இலங்கை அணிக்குப் பின்னடைவை ஏற்படுத் தியது. நான்காம் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களை எடுத்திருந்த அந்த அணி, கடைசி நாளான நேற்று மேலும் 14 பந்துகளுக்கு மட்டுமே தாக்குப் பிடித்தது. இறுதியில் 236 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அந்த அணி படுதோல்வி அடைந்தது.