முன்னேற்றப் பாதையில் மேன்யூ

மான்செஸ்டர்: நிர்வாகி பதவியில் இருந்து மொரின்யோ நீக்கப்பட்டு ஒலே குனார் சோல்சியார் அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட பிறகு மான்செஸ்டர் யுனைடெட் காற் பந்துக் குழுவினரின் ஆட்டத்தில் புதிய உத்வேகம் காணப்படுகிறது. கார்டிஃப் சிட்டி, ஹடர்ஸ்ஃபீல்ட் டௌன் குழுக்களை வெற்றி கொண்ட மேன்யூ, நேற்று முன் தினம் பின்னிரவில் நடந்த ஆட்டத் தில் 4=1 என்ற கோல் கணக்கில் போர்ன்மத் குழுவை நசுக்கியது. சோல்சியாரின் வருகைக்குப் பின் ஆடிய மூன்று ஆட்டங்களில் 12 கோல்களைப் போட்டு மேன்யூ வீரர்கள் அசத்தியுள்ளனர்.

குறிப்பாக, மொரின்யோவின் மனத்தைக் கவராத பிரெஞ்சு ஆட் டக்காரர் பால் போக்பா, சோல்சியா ரின் அபிமானத்தைப் பெறும் வகை யில் ஆடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் மேன்யூ சார்பில் விழுந்த முதல் இரு கோல் களுக்கும் சொந்தக்காரர் அவர் தான். முற்பாதியின் இறுதியில் மார்க்கஸ் ரேஷ்ஃபர்டும் இரண்டாம் பாதியில் ரொமேலு லுக்காகுவும் ஆளுக்கொரு கோலை அடித்து மேன்யூவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் ஐந்தாமிடத்தில் உள்ள ஆர்சனலுக்கும் மேன்யூ விற்குமான புள்ளி வித்தியாசம் மூன்றாகக் குறைந்தது. "எல்லா நேரங்களிலும் தாக்கு தலுக்கு நான் அதிக முக்கியத் துவம் தருவதாக எல்லாருமே நினைக்கின்றனர். ஆனால், நல்ல தற்காப்பே வெற்றிக்கு அடித்தளம். எதிரணியை ஒரு கோல்கூட போட விடாமல் தடுத்துவிட்டாலே ஆட் டத்தை வெல்ல நல்ல வாய்ப்பு கிட்டிவிடும்," என்றார் சோல்சியார். அடுத்ததாக, நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடக்க உள்ள ஆட்டத்தில் நியூகாசல் யுனை டெட்டுடன் மேன்யூ மோதுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!