ஓங்கி அடித்த மேவெதர்; நிலைகுலைந்த நசுகாவா

ஓங்கி அடித்த மேவெதர்; நிலைகுலைந்த நசுகாவா

1 mins read
d0daa3d9-6c66-41e4-896a-c96db461f506
-

சாய்டாமா: ஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் ஃபிளோயிட் மேவெதர் வாகை சூடினார். ஜப்பானின் 'கிக்பாக்சிங்' வீரரான கென்‌ஷின் நசுகாவாவை அவர் முதல் சுற்றிலேயே 'நாக்அவுட்' செய்து வெற்றி பெற்றார். முதல் சுற்றிலேயே நசுகாவா மூன்று முறை மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபிளோயிட் மேவெதர் (இடது) விட்ட குத்தில் மயங்கி விழுந்து தோற்ற நசுகாவா. படம்: இபிஏ