துபாய்: கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை அனைத் துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் டெஸ்ட் பந்தடிப்பாளர்கள் தரவரிசையில் முதல் ஆறு இடங்களில் மாற்றம் ஏதுமில்லை. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தொடர்ந்து முதலிடத் தில் உள்ளார். பந்துவீச்சாளர்களின் தரவரி சையில் தென்னாப்பிரிக்காவின் காஜிசோ ரபடாவும் இங்கிலாந் தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் முதல் இரண்டு பந்துவீச்சாளர் களாக இருக்கின்றனர். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 28வது இடத்திலிருந்து 16வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் பும்ரா முன்னேற்றம்
1 mins read

