கார்டிவ்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு பிரிமியர் லீக் விருதை வெல்ல வேண்டுமாயின் ஒரே சீராக விளையாடுவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும் என்று நேற்று அதிகாலை கார்டிவ் சிட்டி குழுவை 3-0 என்ற கோல் எண் ணிக்கையில் வெற்றி கொண்ட ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகியான மொரிசியோ பொச்செட்டினோ கூறியுள்ளார். சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு உல்வ்ஸ் குழுவிடம் 1-3 என அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
ஆனால், நேற்று அதிகாலை கார்டிவுடனான ஆட்டத்தில் அது தனது பழைய வெற்றி கொள்ளும் பாணிக்குத் திரும்பியது. நேற்றைய ஆட்டத்தில் கார்டிவ் சிட்டியின் தற்காப்பு அரணை ஸ்பர்ஸ் குழு சின்னாபின்னமாக்கி சிதறடித்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. இதில் ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஸ்பர்ஸின் ஹேரி கேன் முதல் கோலை அடிக்க அடுத்த ஒன்பதா வது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் இரண்டாவது கோலை போட்டார்.
பின்னர், ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் மூன்றாவது கோலை சோன் ஹியுன் மின் போட முதல் பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்களை அனாயாசமாக போட்டது ஸ்பர்ஸ் குழு. அதன் பின்னர் ஸ்பர்ஸ் குழு வினரின் வெற்றியைத் தடை செய் வதற்கு ஏதுமில்லை என்ற நிலை உருவானது. இதன்மூலம் பிரிமியர் லீக் தர வரிசைப் பட்டியலில் மான்செஸ்டர் சிட்டியை முந்திக்கொண்டு ஸ்பர்ஸ் குழு இரண்டாம் நிலைக்கு முன்னேறியது.
அது தற்பொழுது 48 புள்ளிகள் எடுத்து மான்செஸ்டர் சிட்டி குழு வைவிட ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்றுள்ளது. உல்வ்ஸ் அணியிடம் சென்ற வாரம் தோற்றதையடுத்து இந்த வெற்றி ஸ்பர்ஸ் குழுவுக்குப் புத் துயிர் ஊட்டுவதாக உள்ளது என்றும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன. "நாங்கள் மிகவும் அமைதியா கவும் அலட்டிக்கெள்ளாமலும் விளையாடினோம். அது மிகவும் முக்கியமானது.
"உல்வ்ஸ் குழுவிடம் நாங்கள் தோற்றது தற்செயலான விபத்து என்பதை நாங்கள் இன்று நிரூபித்துள்ளோம். "காற்பந்துப் போட்டி அட்ட வணை பைத்தியக்காரத்தனமா னது. சில ஆட்டங்களில் எங்களால் விளையாட முடியாமல் போனது இயற்கையே.

