மும்பை: ஆஸ்திரேலியாவில் சுற் றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந் திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்க வுள்ள நிலையில், இதில் பங்கேற் கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள் ளது. விராத் கோஹ்லி தலை மையி லான அணியில் ரஹானே, கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை. அவருக் குப் பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப் பட்டுள்ளார். சிட்னி டெஸ்டுக்கு அஸ்வின் உடற்தகுதி பெறவில்லை என அணியின் செய்தித் தொடர் பாளர் அறிவித்த நிலையில், தற் போது 13 பேர் கொண்ட பட்டியலில் அஸ் வின் இடம்பிடித்துள்ளார். நாளை போட்டி தொடங்கும் போது, சூழலைப் பொறுத்து, களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மெல்பர்னில் பெற்ற வெற்றியால் அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்திய அணி, கடைசி டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

