சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடை யிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் உள்ள சிட்னி கிரிக் கெட் மைதானத்தில் நேற்று தொடங் கியது. பூவா தலையா வில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்தடிப்பைத் தேர்வு செய் தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக குல் தீப் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகி யோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ் காம்ப், லாபஸ் சேக்னே ஆகியோர் இடம்பிடித்த னர். மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 9 ஓட்டங்கள் எடுத்த நிலை யில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மயாங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபார மான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
மதிய உணவு இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட் இழப் பிற்கு 69 ஓட்டங்கள் எடுத் திருந் தது. உணவு இடை வேளைக்குப் பின் நடந்த ஆட்டத்தில் மயாங்க் அகர்வால் 96 பந்தில் அரைசதம் அடித்த பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத் தினார். 112 பந்தில் 77 ஓட்டங்கள் சேர்த்த அவர், நாதன் லயன் பந்தில் ஆட்டம் இழந் தார். 2வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் = புஜாரா ஜோடி 116 ஓட்டங்கள் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராத் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். புஜாரா சிறப்பாக விளையாடி 134 பந்தில் அரைசதம் அடித் தார். தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத் திருந் தது. புஜாரா 61 ஓட்டங்களுட னும் கோஹ்லி 23 ஓட் டங் களுடனும் களத்தில் இருந்தனர்.

