தொடர் வெற்றி பெறும் சோல்சியார்

நியூகாசல்: மான்செஸ்டர் யுனை டெட்டின் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றபின் அடுத்த நான்கு ஆட்டங்களிலும் குழுவுக்கு தொடர் வெற்றிகளைக் குவித் துள்ள நிலையில், ஒலே குனார் சோல்சியார் யுனைடெட்டின் வர லாற்று நாயகனாக விளங்கும் சர் மேட் பஸ்பி என்பவரின் சாத னைக்கு ஈடுகொடுத்துள்ளார். நியூகாசல் குழுவின் சொந்த மைதானத்தில் களமிறங்கிய யுனைடெட் முதல் பாதி ஆட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டபோதிலும் அதனால் கோல் எதுவும் போட முடியவில்லை. போதாக் குறைக்கு எங்கே நியூகாசல் குழு யுனைடெட்டுக்கு எதிராக முதல் கோலை போட்டு விடுமோ என யுனைடெட் ரசிகர் கள் பதறும் அளவுக்கு நியூகாசலின் ஆட்டம் அமைந்தது.

பார்த்தார், சோல்சியார் தமது தாக்குதல் ஆட்டக்காரர்களான மார்சியால், ரேஷ்ஃபர்ட் இருவரும் தான் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பதை அறிந்து இரு மாற்று ஆட்டக்காரர் களான ரொமேலு லுக்காகு, அலெக்சிஸ் சான்செஸ் ஆகியோரை இறக்கினார். அது வரை தொய்விலிருந்த யுனைடெட் டின் ஆட்டத்தில் ஒரு புது மெருகு ஏறியது. லுக்காகு களத்துக்கு வந்த மாத்திரத்திலேயே ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைக்க, பந்தை ரேஷ்ஃ பர்ட் கோல் வலையை நோக்கி உதைத்தார். ஆனால், அதை சரியாகப் பிடிக்காமல் விட்ட நியூகாசல் கோல்காப்பாளரின் கரங்க ளி லிருந்து பந்து நழுவ, அருகில் இருந்த லுக்காகு புலியெனப் பாய்ந்து ஆட்டத்தின் 64ஆம் நிமிடத்தில் பந்தை வலைக் குள் தட்டினார். அதன் பின்னரும் யுனைடெட் டின் வெற்றி வாய்ப்பு நிச்சயமில்லை என்று எண்ணும் அளவுக்கு இருந் தது நியூகாசலின் எதிர்த்தாக்குதல். இருப்பினும், லுக்காகு, சான்செஸ் இருவரும் பந்தை தட்டிச் சென்று ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ரேஷ்ஃ பர்ட்டிடம் தர அவரும் அமைதியாக இரண்டாவது கோலைப் போட்டு யுனைடெட் குழுவின் வெற்றியை உறுதி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!