சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய அணியின் ஆட்டக்காரர்கள்

சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய அணியின் ஆட்டக்காரர்கள்

1 mins read

* இந்தத் தொடரில் புஜாரா எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை. நான்கு அல்லது அதற்கும் குறைவான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட 4வது வீரர். ரிச்சி ரிச்சர்ட்சன் (1,358), ராகுல் டிராவிட் (1,336), அலெஸ்டர் குக் (1,285) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் அதிக பந்துகளை எதிர்கொண்டவர் என்ற பெருமை புஜாராவிற்குக் கிட்டியது. * ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளர் எனும் சாதனையைப் படைத்தார் 21 வயதான ரிஷப் பன்ட். அதே போல 'SENA' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட்காப்பாளர் இவர்தான். டோனி (224), குந்தேரன் (192) ஆகியோருக்குப் பின் அதிகபட்ச ஓட்டங்கள் (159*) எடுத்த இந்திய விக்கெட்காப்பாளரும் இவரே. * ரிஷப் பன்ட்டும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 7வது விக்கெட்டுக்குச் சேர்த்த ஓட்டங்களின் எண்ணிக்கை. இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் 7வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த இணை என்ற பெருமையை அவர்கள் தேடிக்கொண்டனர்.