சிட்னி: இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருக்கும் 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்கப் பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட், டார்சி ஷாட், கிறிஸ் லின், பென் மெக்டர்மட், ஆஷ்டன் ஏகார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒருநாள் போட்டிக் கான அணியில் இடம்பிடித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில். டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நேதன் லயன், உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 12, 15, 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் இடம்பெறும். அணி விவரம்: ஆரோன் ஃபிஞ்ச் (அணித் தலைவர்), அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.
பல மாற்றங்களுடன் களமிறங்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா
1 mins read

