சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் எனும் இந்திய கிரிக்கெட் அணியின் நீண்டகாலக் கனவு நனவாகப்போவது கிட்டத் தட்ட உறுதியாகியுள்ளது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 2=1 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி 4வது போட்டியிலும் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடிக்கத் தீர்மானித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் முடிவு நன்மை அளிப்பதாக அமைந்தது. முதல் நாளில் சதமடித்த புஜாராவின் அபாரப் பந்தடிப்பு நேற்று இரண்டாம் நாளிலும் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய வீரர் களின் பந்துகளைத் திறம்பட எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்த அவர், இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மைல்கல்லை எட்ட ஏழு ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் நேதன் லயன் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 193 ஓட்டங்களுடன் வெளியேறிய அவருக்கு இந்தத் தொடரில் இது மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விகாரி 42 ஓட்டங்களுக்கு ஆட்ட மிழக்க, புஜாராவுடன் இணைந்த ரிஷப் பன்ட் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்.
அத்துடன் இவரும் தன் பங்குக்கு ஒரு சதத்தை விளாசி னார். டெஸ்ட் அரங்கில் இவருக்கு இது இரண்டாவது சதம். ஏழாவது விக்கெட்டுக்கு பன்ட் உடன் இணைந்த ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் ஆஸ்திரேலிய வீரர் களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். அவரும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டம் இழந்தார். அத்துடன், ஏழு விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை முடித் துக்கொண்டது. பன்ட் 159 ஓட்டங் களுடன் ஆட்டமிழக்காமல் இருந் தார். அடுத்து பந்தடிக்கத் தொடங் கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை எடுத் திருந்தது. ஹாரிஸ் 19 ஓட்டங்கள் உடனும் கவாஜா ஐந்து ஓட்டங் களுடனும் களத்தில் உள்ளனர்.

