லிவர்பூலுக்கு முதல் சறுக்கல்; சிட்டி எழுச்சி

லிவர்பூலுக்கு முதல் சறுக்கல்; சிட்டி எழுச்சி

3 mins read
6ec177ed-e6ff-4b1c-b147-d3ca176dfbc9
-

மான்செஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத் தின் தொடக்கத்தில் இருந்து 20 ஆட்டங்களாகத் தோல்வியே காணாது வீறுநடை போட்டு வந்த லிவர்பூல் காற்பந்துக் குழுவை முதன்முறையாக தோல்வியின் கசப்பை உணரச் செய்தது மான் செஸ்டர் சிட்டி குழு. சிட்டியின் எட்டிஹாட் விளை யாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த முக்கியமான ஆட்டம் தொடக்கம் முதலே மிகவும் விறு விறுப்பாக இருந்தது. ஆயினும் இறுதியில் 2=1 என்ற கோல் கணக்கில் சிட்டி வெற்றிக்கனியைப் பறித்தது. இதன்மூலம் பட்டியலின் முதல் இடத்தில் உள்ள லிவர்பூலுக்கும் அடுத்த இடத்தில் உள்ள தனக்கும் இடையிலான புள்ளி வித்தியா சத்தை சிட்டி குழு நான்காகக் குறைத்தது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் லிவர்பூலின் கோல் முயற்சியை முறியடித்தபோதும் சிட்டியின் ஜான் ஸ்டோன்ஸ் தடுத்த பந்து கோல் காப்பாளர் எடர்சனின் மீது பட்டு வலையை நோக்கித் திரும் பியது. கிட்டத்தட்ட பந்தின் முக்கால் பாகம் கோல் கோட்டைத் தாண்டிய போதும் முழுமையாகக் கடக்காத தால் அதை கோலாக அறிவிக்க நடுவர் மறுத்துவிட்டார்.

லிவர்பூல் ஆட்டக்காரர்கள் பெரும் முட்டுக்கட்டையாக விளங் கியபோதும் செர்ஜியோ அகுவேரோ கிடைத்த குறுகிய இடைவெளியில் பந்தை நேர்த்தியாக வலைக்குள் தள்ளி கோலாக்க, ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் சிட்டி முன் னிலை பெற்றது. இருப்பினும் இடைவேளைக்குச் சென்று திரும்பியபின் லிவர்பூல் பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் வலைக்கு மிக அருகே இருந்து ஃபிர்மினோ பந்தைத் தலையால் முட்டி கோல் அடிக்க, ஆட்டம் 1=1 எனச் சம நிலைக்கு வந்தது.

இழந்த முன்னிலையை எட்டு நிமிடங்களிலேயே மீட்டது சிட்டி. ஜெர்மானிய ஆட்டக்காரர் லிரோய் சானே அடித்த அந்த அற்புதமான கோல் சிட்டியின் வெற்றி கோலா கவும் அமைந்தது. லிவர்பூலுக்கு எதிராக ஆடிய கடைசி 12 ஆட்டங்களில் சிட்டி வென்றிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த பருவத்திலும் எட்டி ஹாட் அரங்கில் நடந்த லிவர்பூல் குழுவுடனான மோதலிலும் அந்தக் குழுவே வாகை சூடியிருந்தது. லிவர்பூல் குழுவிற்கு எதிரான ஆட்டத்தை இறுதி ஆட்டம்போல் கருதி விளையாடியதாகக் குறிப் பிட்டார் சிட்டி நிர்வாகி ஜோசஃப் கார்டியோலா.

"இந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றிருந்தால் பட்டம் கையை விட்டுப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும். எமது வீரர் களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நான்கு நாட்களில் இரு ஆட்டங்களில் தோற்றபோதும் கடந்த 16 மாதங்களாக அவர்கள் கொட்டிய உழைப்பை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற ஒரு கடின மான லீக்கில் ஆடியதாக எனக்கு நினைவில்லை. பட்டம் வெல்ல பல குழுக்களுக்கு வாய்ப்புள்ளது. இனி வரும் ஒவ்வோர் ஆட்டமும் இறுதி ஆட்டம் போலத்தான்," என்றார் அவர்.

தோற்றதை எண்ணி வருத்தப் படவேண்டாம் எனக் கூறி, தம் ஆட்டக்காரர்களைத் தேற்றியதாகச் சொன்னார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். "நெருக்கடியான ஆட்டம் இது. அதற்கேற்ப ஆட்டத்திலும் அனல் பறந்தது. சில நேரங்களில் சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் நாங்கள் மீண்டெழுந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினோம். அவற்றின்மூலம் கோலடித்திருக்க வேண்டும். சிறிய இடைவெளியில் அகுவேரோ கோலடித்தார். அது போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் கோலடிக்கத் தவறிவிட்டோம்," என்று கிளோப் கருத்துரைத்தார்.