வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளர்

1 mins read
Google News Preferred Icon

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இங்கி லாந்து நாட்டவரான ரிச்சர்ட் பைபஸ், 54, நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகளுக்குப் பயிற்சியளித்த அனுபவம் கொண்ட பைபஸ் கடந்த 2013 முதல் 2016 வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் இயக்குநராகவும் அதன்பின் உயர் செயல்திறன் இயக்கு நராகவும் பணியாற்றி வந்தார். இதற்குமுன் அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் லா கடந்த செப்டம்பரில் பதவி விலகினார். இப்போது அவர் இங்கிலாந்து கவுன்டி அணியான மிடில்செக்சுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.