ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் (படம்) நடந்து கொண்டவிதம், கிரிக்கெட் ஒரு 'ஜென்டில்மேன் கேம்' என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்கஸ் ஹாரிஸ், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தைத் தூக்கி அடித்தார். 'மிட் ஆன்' திசையில் நின்றிருந்த ராகுல் முன்னே பாய்ந்து அந்தப் பந்தைப் பிடித்தார். இதைக் கண்டதும் ஹாரிஸ் ஆட்டமிழந்துவிட்டதாக எண்ணி இந்திய வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ராகுலை நோக்கி ஓட எத்தனித்தனர். ஆனால் ராகுலோ, 'இது 'அவுட்' இல்லை. தான் பிடிக்கும் முன் பந்து தரையில் பட்டுவிட்டது' எனச் சைகை காட்டினார். ராகுல் இப்படி நேர்மையாக நடந்துகொண்டதைக் கண்ட கள நடுவர் இயன் கூல்ட், கைதட்டியும் கட்டை விரலை உயர்த்திக்காட்டியும் அவரைப் பாராட்டினார். இதனிடையே, பெர்த்தில் நடந்த 2வது போட்டியில் கோஹ்லி அடித்த பந்து தரையில் பட்டதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியாவிடி னும் அது 'அவுட்'தான் என உறு தியாகக் கூறிய ஹேண்ட்ஸ்கோம்ப், ராகுலைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூக ஊடகவாசி கள் விமர்சித்து வருகின்றனர்.
ராகுலின் நேர்மைக்குப் பாராட்டு
1 mins read
-

