சிட்னி: இந்திய அணிக்கெதிரான கடைசி, நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 'ஃபாலோ ஆனை' தவிர்க்கப் போராடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் ஆஸ்திரே லியா ஒரு போட்டியிலும் வென்றன. இதனால் சிட்னியில் நடந்து வரும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைச் சமன்செய்ய முடியும் என்ற இக்கட்டில் ஆஸ்தி ரேலியா உள்ளது. இந்த நிலையில், முதலில் பந்த டித்த இந்திய அணியில் புஜாரா, ரிஷப் பன்ட் ஆகியோர் அபாரமாக ஆடி, சதம் விளாசி, பல சாதனை களைப் புரிந்தனர். ஏழு விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் இன் னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. தொடர்ந்து தனது முதல் இன் னிங்சைத் தொடங்கிய ஆஸ்தி ரேலியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்கஸ் ஹாரிசும் உஸ்மான் கவாஜாவும் மூன்றாம் நாளான நேற்றும் நிதானமாக ஆடி ஓட்டம் சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 72ஆக இருந்தபோது அந்த இணையைப் பிரித்தார், இந்தத் தொடரில் முதன்முறையாக ஆடும் வாய்ப்பு பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். 27 ஓட்டங்களை எடுத்திருந்த கவாஜா, புஜாராவிடம் பிடிகொடுத்து வெளி யேறினார். அதையடுத்து, ஹாரிசுடன் இணைந்தார் புதிய வரவான மார்னஸ் லபுஷேன். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்களை எடுத்தனர். தொட ரில் இரண்டாவது அரை சதத்தைக் கடந்த ஹாரிஸ் 79 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஜடேஜா விடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷான் மார்ஷை எட்டு ஓட்டங்களில் வெளியேற்றி னார் ஜடேஜா. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த லபுஷேன், விராத் கோஹ்லியின் வியூகத்தில் வீழ்ந் தார். ரகானேவை 'ஷாட் மிட் விக்கெட்' திசையில் அவர் நிறுத் தியதும் அடுத்த பந்திலேயே அவரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார் லபுஷேன்.
அவர் 38 ஓட்டங்களை எடுத்தார். டிராவிஸ் ஹெட் 20 ஓட்டங்களி லும் ஆஸ்திரேலிய அணித் தலை வர் டிம் பெய்ன் ஐந்து ஓட்டங்களி லும் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினர். மூன்றாவது போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியப் பந்துவீச்சை சமாளித்து அரை சதம் விளாசிய பேட் கம்மின்ஸ் இம்முறையும் சிறப்பாகப் பந்தடித்தார். இன்னும் 16.3 ஓவர்கள் வீசப் பட வேண்டியிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரண மாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் (28*), கம்மின்ஸ் (25*) களத்தில் உள்ளனர்.

