தாய்லாந்து காற்பந்து குழு நிர்வாகி அதிரடி நீக்கம்

தாய்லாந்து காற்பந்து குழு நிர்வாகி அதிரடி நீக்கம்

1 mins read
4e110c37-27c2-407f-9774-c839d6891963
-

ஏஎஃப்சி ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2019: இந்தியாவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணி தோல்வி கண்டதை தொடர்ந்து அதன் காற்பந்து நிர்வாகியான மிலொவான் ரயவாஜ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக தாய்லாந்து காற்பந்து அணி இதர போட்டிகளில் நன்றாக விளையாட பட்சத்தில் இந்த முடிவை தாய்லாந்து காற்பந்து சங்கம் எடுத்துள்ளது.

தாய்லாந்தின் துணை நிர்வாகியான சிரிசாக் யொத்யாத்தாய் அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வகிப்பார்.

ஏஎஃப்சி ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் பிரிவு 'ஏ' பட்டியலில் தற்போது மூன்று புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

தாய்லாந்து அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் ஐக்கிய அரபு சிட்டரசு குழுவையும் பஹரேன் குழுவையும் சந்திக்கவுள்ளது.

படம்: ஏபி