மாற்றங்களுடன் களமிறங்க காத்திருக்கும் லிவர்பூல், போராட தயாராகவுள்ள உல்வ்ஸ்

உல்வர்ஹேம்டன்: காற்பந்துப் போட்டிகளில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தையும் சாம்பியன்ஸ் லீக்கையும் வெல்லத் துடிக்கும் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் எஃப்ஏ கிண்ணத்தையும் கைப்பற் றும் ஆர்வத்தில் உள்ளார். பிரிமியர் லீக் போட்டிகளில் லிவர்பூலின் தோல்வியில்லா பய ணத்திற்கு கடந்த வியாழக்கிழமை முற்றுப்புள்ளி வைத்தது மான்செஸ் டர் சிட்டி. இதுவே அக்குழுவின் அண்மைய தோல்வியாகும். இந்நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் 3வது சுற்று ஆட்டத் தில் இன்னோர் பிரிமியர் லீக் குழுவான உல்வ்ஸை எதிர்கொள் கிறது லிவர்பூல். உல்வ்ஸ் குழுவும் கடந்த வாரம் கிறிஸ்டல் பேலஸ் குழுவிடம் தோற்ற பிறகு களமிறங்கும் முதல் ஆட்டம் இது.

ஆனால், பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் இக்குழுக்கள் மோதிய ஆட்டத்தில் லிவர்பூல் 2=0 என்று வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட கிய்ட்டா, லல்லானா, 30 நிமிடத்திலேயே வெளியேறிய ஃபேபினோ உள் ளிட்டோரை கிளோப் இன்று களமிறக்கக்கூடும். ஆனால் சாலா, ஃபிர்மினோ, சாடியோ மனே ஆகியோர் விளை யாடுவது சந்தேகம் தான். அதே சமயம் வலுவான லிவர் பூல் குழுவை எதிர்கொள்ள தாங் கள் கடுமையாக போராட வேண் டியிருக்கும் என்றும் அதற்கு தனது குழுவினர் தயாராகி வரு வதாகவும் கூறியுள்ளார் உல்வ்ஸ் குழுவின் நிர்வாகி எஸ்பிரிட்டோ சான்டோ.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நிலையில் உள்ள லிவர்பூல் நிர்வாகி கிளோப். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!