புதிய நிர்வாகியின் கீழ் மேன்யூ 5வது வெற்றி

லண்டன்: பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனை டெட் புதிய நிர்வாகியின் கீழ் ஐந்தாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து உள்ளது. நிர்வாகி பதவியில் இருந்து மொரின்யோ நீக்கப்பட்ட பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தற்காலிக நிர்வாகியாக கடந்த மாதம் பொறுப்பேற்றார் ஒலே கன்னர் சோல்சியார். இவரின் கீழ் பிரிமியர் லீக் போட்டிகளில் நான்கு தொடர் வெற்றிகளை பதிவு செய்த மேன்யூ, நேற்று முன்தினம் இரவு எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் மூன்றாவது சுற்றில் ரெடிங் குழுவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் மேன்யூ 2-=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும் அவர்கள் விளை யாடிய விதம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

மேலும் ரெடிங் குழுவும் சரியாக விளையாட நிலையில், மேன்யூ முதல் பாதியிலேயே இரு கோல் களையும் போட்டுவிட்டது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் மேன்யூ வீரர் ஃபெரெட் வலைக்குள் தள்ளிய பந்தை 'ஆஃப்சைட்' என்று கூறிய நடுவர் கோலாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு ஒமர் ரிச்சர்ட்ஸின் தப்பாட்டம் காரணமாக யுவன் மாட்டாவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

22வது நிமிடத்தில் கிடைத்த அந்த வாய்ப்பை அவர் கோலாக்கி னார். ஆனால் பெனால்டி வாய்ப்பை உறுதி செய்வதற்காக கள நடுவர் காணொளி உதவி நடுவர் முறையை நாடியது தேவையற்ற ஒன்று எனவும் நேர விரயம் என்ற சர்ச்சையும் கிளம்பியது. முதல் பாதி நேரத்தின் காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தில் ரொமேலு லுகாகு இன்னோர் கோலைப் போட மேன்யூவின் கோல் எண்ணிக்கை இரண்டா னது. இதற்கிடையே ரெடிங் குழுவி னரின் இரண்டு கோல் போடும் முயற்சிகளைத் தடுத்துவிட்டார் எதிரணி யின் கோல் காப்பாளர் செர்ஜியோ ரொமேரோ. மேன்யூவோடு, ஆர்சனல், செல்சி உள்ளிட்ட பிரிமியர் லீக் குழுக்களும் நான்காவது சுற்றுக்கு முன்னேறின.

நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவை 2-0 என வெற்றி கொண் டது செல்சி. வெற்றிக்கான இரு கோலைகளையும் போட்டார் மொராட்டா. அதே போல் பிளாக்பூல் குழுவை 3-0 என ஆர்சனல் வீழ்த்தியது. அக்குழுவின் 19 வயது ஆட் டக்காரர் வில்லாக் இரண்டு கோலும் இவோபி ஒரு கோலும் போட்டனர். இதர பிரிமியர் லீக் குழுக்களான கார்டிஃப், ஹட்டர்ஸ்பீல்டும் இரண் டாம் நிலை குழுக்களிடம் தோற்று எஃப்ஏ கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறின.

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ரொமேலு லுகாகு (நடுவில்). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!