குல்தீப் சுழலில் சின்னாபின்னமான ஆஸ்திரேலிய பந்தடிப்பாளர்கள்

சிட்னி: இந்திய வீரர் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் சிக்கி ஐந்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங் சில் 'பாலோ ஆன்' பெற்றது. சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையி லான 4வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதையடுத்து, பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட முடிவில் 83.3 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் சேர்த்தது. வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட் டது.

இந்நிலையில் நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் கம்மின்ஸ் ஷமி பந்திலும் ஹேண்ட்ஸ் கோம்ப் பும்ரா பந்திலும் வெளியேறினர். ஏற்கெனவே டிம் பெய்ன், ஹெட், கவாஜா விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஹேசில்வுட், லயன் என மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்கள் எடுத்தது. 322 ஓட்டங்கள் பின்தங்கியதால் 'பாலோ-ஆன்' வழங்கியது இந்திய அணி.

31 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டி யில் ஆஸ்திரேலியா 'பாலோ-ஆன்' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1988ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று ஆடித் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விளையாடுவ தற்குச் சாதகமான சூழல் இல்லாத தால் உணவு இடைவேளை ஆட்டம் நிறுத்தப்பட்டது. உணவு இடைவேளைக்குப்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா இரண் டாவது இன்னிங்சை விளையாடி யது. கவாஜாவும் ஹாரிசும் பந்தடித் தனர். நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆறு ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நான்கா வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா 316 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இன்று மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தைப் பயன் படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும். ஏற்கெனவே 2=1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

எதிரணி மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் குல்தீப் யாதவ். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!