'இந்தியா வெற்றி பெற விடமாட்டோம்'

'இந்தியா வெற்றி பெற விடமாட்டோம்'

1 mins read

தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராட வேண்டிய நிலையில், இந்தியாவை வெற்றி பெறவிடமாட்டோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பந்தடிப்பாளர் ஹேண்ட்ஸ்கம்ப். "வெற்றிக்கு வழி விடமாட்டோம். முடிந்தவரை இப்போட்டியை 'டிரா' செய்வதற்கு போராடுவோம். "4வது நாள் முழுதும் மழையால் வீணாகிப் போனது. இல்லையென்றால் இந்தப் போட்டியை நாங்கள் வென்று தொடரை சமன் செய்ய முயற்சித்திருப்போம். "எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. போட்டியை சமன் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்போம். "இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா இருவரும் சிறப்பாகப் பந்துவீசுகிறார்கள். வேகமாகவும் துல்லிய மாகவும் வீசும் பும்ரா வின் பந்துவீச்சை எதிர் கொள்வது கடினமாக இருக்கிறது. தனது துல்லியத்தன்மை குறையாமல், அதே சமயம் 'ஸ்விங்' செய்து வீசுவது பந்தடிப்பாளர்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது," என்றார்.2019-01-07 05:59:00 +0800