பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் முதல் இன்னிங் சில் 177 ஓட்டங்களுக்கு சுருண் டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்னாப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோ ரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 254 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ஓட்டங்களும் ஆசாத் ஷபிக் 88 ஓட்டங்களும் பாபர் ஆசம் 72 ஓட்டங்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

254 ஓட்டங்களைத் தாண்டிய தால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது. இதனால் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்றை கடைசி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி ருசித்தது. தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், தற்போது 2-0 எனத் தொடரைக் கைப்பற்றி உள் ளது. ஆட்டத்திற்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் கூறும்போது, "2வது இன்னிங்சில் நாங்கள் தைரியமாக அடித்து ஆடினோம். அதுபோல் முதல் இன்னிங்சில் ஆடி 250-300 எடுத்திருந்தால் ஆட்டம் வேறு விதமாக இருந்திருக்கும்," என் றார். மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11ஆம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!