ஆசிய கிண்ண காற்பந்து: தாய்லாந்தை பந்தாடியது இந்தியா

ஆசிய கிண்ண காற்பந்து: தாய்லாந்தை பந்தாடியது இந்தியா

1 mins read
736c5cb0-53c1-4167-bb1e-a0febbbca2bf
-

அபுதாபி: ஆசிய கிண்ணக் காற் பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைப் பந்தாடியது. 17வது ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணி கள் 6 பிரிவாக பிரிக்கப்பட் டுள் ளன. ஒவ்வொரு அணியும் தங் கள் பிரிவில் உள்ள மற்ற அணி களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங் களைப் பிடிக்கும் அணிகள் மற் றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 12 அணிகள் 2வது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற் றுள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசு, தாய்லாந்து, பஹ்ரைன் ஆகிய அணிகளும் அந் தப் பிரிவில் அங்கம் வகிக்கின் றன. தரவரிசையில் 97வது இடம் வகிக்கும் இந்திய அணி, தங் களைவிட 21 இடங்கள் பின் தங்கிய அணியான தாய் லாந்தை அபுதாபியில் நேற்று முன்தினம் சந்தித்தது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆக்ரோ ஷமாக விளை யாடி னர். 27வது நிமிடத் தில் இந்திய வீரர் சரனோன் அனுன் அடித்த பந்தை தாய் லாந்து கோல் கீப்பர் சாட்சாய் பூட்பிரோன் தடுத்தார்.