மெஸ்ஸியை முந்திய சேத்ரி

மெஸ்ஸியை முந்திய சேத்ரி

1 mins read
0e1997e0-b665-4bd5-93c9-bc70c94fdba2
-
Google News Preferred Icon

இந்திய காற்பந்து அணித் தலைவர் 34 வயதான சுனில் சேத்ரி (வலது) நேற்று முன்தினம் அடித்த 2 கோல்களையும் சேர்த்து அனைத்துலகப் போட்டியில் அவ ரது ஒட்டுமொத்த கோல்கள் 67ஆக (105 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் தற்போது விளை யாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் அதிக அனைத்துலக கோல்கள் அடித் தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த அர்ஜென்டினா ஜாம்பவான் லயனல் மெஸ்ஸியை (128 ஆட்டத்தில் 65 கோல்) பின் னுக்குத் தள்ளினார். தற்போது ஆடும் வீரர்களில் அதிகபட்சமாக போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 85 கோல்கள் (154 ஆட்டம்) போட்டு முதலிடம் வகிக் கிறார்.