டெஸ்ட் தொடர்: வரலாறு படைத்தது இந்திய அணி

டெஸ்ட் தொடர்: வரலாறு படைத்தது இந்திய அணி

2 mins read
bf9c0b45-7d17-4927-8469-70e6bc38d124
-

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரை 2=1 என்று இந்தியா வென்றது. கடந்த 72 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணில் வென்று புதிய வரலாற் றுச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி. சிட்னியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி, மழை காரணமாக 'டிரா' என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெஸ்ட் தொடரை 2=1 என்ற கணக்கில் வென்றது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. முதல்முறையாக 1947ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி இதுவரை அந்த மண்ணில் ஒரு முறைகூட டெஸ்ட் தொடரை வென் றது இல்லை.

இப்போது ஆஸ்திரேலி யாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை இந்திய அணி பெற் றுள்ளது. இதுவரை ஆசிய அணி கள் ஆஸ் திரேலிய மண்ணில் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யுள் ளன. அவற்றில் 66 போட்டிக ளில் தோல்வியும் 11 வெற்றிகளும் பெற் றுள்ள போதிலும் யாரும் தொடரை வென்றது இல்லை. ஆசிய அணிகள் 31 தொடர்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய போதிலும் தொடரை வெல்ல முடி யா மல் திரும்பின.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முதல் முறையாக இந்தியா வென்றதற்கு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள் ளும்விதமாக தன் அணியினருடன் இணைந்து உற்சாகத்துடன் கைதட்டுகிறார் கோஹ்லி. படம்: ராய்ட்டர்ஸ்