பும்ராவுக்கு ஓய்வு; சிராஜ், கௌலுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்தும் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்தும் விடுவிக் கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்தொடரில் ஆக அதிகமாகப் பந்து வீசிய இந்திய வீரர் பும்ரா தான். மொத்தம் 157.1 ஓவர்களை அவர் வீசியிருந்தார். இவ்வாண்டு மத்தியில் உலகக் கிண்ணப் போட்டிகள் வரவிருப்ப தால் அதற்குமுன் நன்றாக ஓய்வு எடுத்து ஆயத்தமாகும் விதமாக அவர் இந்தியா திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக ஹைதரா பாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் அணி யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது.

16 Jan 2019

6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி
செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ் PHOTO: REUTERS

16 Jan 2019

வில்லியம்ஸ் சகோதரிகள் முன்னேற்றம்