பொக்கெட்டினோ: ஸ்பர்சில் 20 ஆண்டுகள் நீடிக்க விருப்பம்

லண்டன்: முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான டோட்டன் ஹம் ஹாட்ஸ்பரின் நிர்வாகியாக இருக்கும் மௌரிசியோ பொக் கெட்டினோ 20 ஆண்டுகளுக்கு அக்குழுவுடன் இருப்பேன் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் ஸ்பர்சுடன் இணைந்தார் அர் ஜெண்டினாவைச் சேர்ந்த 46 வயது பொக்கெட்டினோ. அவரது வருகைக்குப் பிறகு ஸ்பர்சின் செயல்பாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த நான்கு பருவங்களிலும் அந்தக் குழு பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முடித்தது. ஆனாலும் எந்தக் கிண்ணத் தையும் பட்டத்தையும் அவரால் வென்று தர முடியவில்லை. இருப் பினும் மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் போன்ற முன் னணிக் குழுக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், 20 ஆண்டு களுக்கு ஸ்பர்சில் நீடிக்க அல்லது ஸ்பர்சிலேயே தமது காற்பந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக பொக்கெட்டினோ கூறியிருப்பது அக்குழுக்களுக்கு ஏமாற்றமளிக்கலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது